SPEAK THESE 5 LINES TO YOURSELF EVERY MORNING IN TAMIL
By Dr. A P J Abdul kalam
தினமும் காலையில் இந்த வரிகளை சொல்வதன்மூலம் உங்களின் மனநிலை நேர்மறையாக செயல்படும் அதனால் உங்களின் வாழ்வில் நீங்கள் நினைத்ததை அடைய முடியும்
Check out this youtube video
1. I AM THE BEST
நானே சிறந்தவன்
ஒவ்வொருவரும் வாழ்கையில் இவர்களை போல இருக்கவேண்டும் அவர்களை போல இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நம்மில் சிலர் இப்போது இருக்கும் நிலையை நினைத்து திருப்தி அடையாமல் அடுத்தவரை போல இருக்க வேண்டும் என ஆசைபடுகிறோம்.
நாம் அனைவரும் தனித்துவமானவர்கள், நம் அனைவருக்கும் வெவ்வேறு திறமை உள்ளது அதை நாம் தான் கண்டறிய வேண்டும். அடுத்தவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை நிறுத்துங்கள். நானே சிறந்தவன் என்று சொல்லிபாருங்கள் மாற்றத்தை நீங்களே உணர்விர்கள்.
2. I CAN DO IT
என்னால் எதையும் சாதிக்க முடியும்
நீங்கள் எந்த ஒரு காரியத்தை செய்ய தொடங்கினாலும் என்னால் அதை செய்து முடிக்க முடியும் என நினைக்கவேண்டும். அந்த எண்ணத்தில் விடாமுயற்சியுடன் செயல்பட்டு அதனால் ஏற்படும் பயத்தை எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள் உங்களிடம் இல்லாததை கடவுள் உங்களுக்கு அளிப்பார். உங்களால் எதையும் சாதிக்க முடியும்.
3. GOD IS ALWAYS WITH ME
கடவுள் எப்போதும் என்னுடன் இருக்கிறார்
உங்களுடைய நண்பர்கள் உங்கள் கனவை பார்த்து சிரிக்கலாம். உங்கள் பெற்றோருக்கு உங்கள் கனவின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அனால் உங்கள் கனவை பார்த்து சிரிக்காமல் உங்கள் கனவின் மீது நம்பிக்கையுடன் இருப்பவர் கடவுள் மட்டும் தான்.
4. I AM A WINNER
நான் ஒரு வெற்றியாளர்
நான் ஜெயிக்க பிறந்தவன் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் நான் வெற்றி பெறுவேன் என்ற எண்ணத்தை உங்களுக்குள் வளர்த்துகொள்ளுங்கள்.
5. TODAY IS MY DAY
இன்று எனக்கான நாள்
கடந்து போன நாட்களை பற்றி கவலை படாதிர்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் புதிய வாய்ப்பு வந்து கொண்டே தான் இருக்கும். உங்கள் எதிர்காலத்தை பற்றி கவனம் செலுத்துங்கள் உங்கள் எதிர்காலம் அழகாக மாறும்.
SUMMARY:-
1. I AM THE BEST - நானே சிறந்தவன்
2. I CAN DO IT - என்னால் எதையும் சாதிக்க முடியும்
3. GOD IS ALWAYS WITH ME - கடவுள் எப்போதும் என்னுடன் இருக்கிறார்
4. I AM A WINNER - நான் ஒரு வெற்றியாளர்
5. TODAY IS MY DAY - இன்று எனக்கான நாள்
நன்றி
ConversionConversion EmoticonEmoticon