THESE 6 TIPS HELPS YOU TO OVERCAME YOUR FEAR
பயத்தை போக்க இந்த எளிய 6 வழிகளை முயற்சித்து பாருங்கள்
பயம்
ஒரு செயலை செய்யலாம் என நினைக்கும் போது பயம் வந்தால் அதை அப்படியே செய்யாமல் விட்டு விடுவோம் அதுதான் மனித இயல்பு. உதாரணமாக ஒரு BLOG தொடங்கலாம் என நினைப்போம் பயத்தினால் வேண்டாம் என விட்டு விடுவோம். ஆனால் அப்படி விடாமல் உங்கள் பயத்தை போக்கி நினைத்த செயலை செய்து முடிக்க வேண்டும். உங்கள் பயத்தில் இருந்து வெளிவர சில எளிமையான வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.
அமைதி
பயம் ஏற்படும் போது 2-3 நிமிடம் அமைதியாக இருக்கவேண்டும். பிறகு உங்களின் நெருங்கிய நண்பரிடம் மனம் விட்டு பேசவும்.
உடற்பயிற்சி
உங்கள் மனதால் ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். உடற்பயிற்சி செய்வதால் உங்கள் கவனம் முழுவதும் மாறிவிடும்.
நேர்மறை எண்ணம்
உங்களை நீங்கள் பயம் அறியாதவர்கள் போல நினைத்து கொள்ளுங்கள். எந்த ஒரு செயலை பற்றி பயம் இருக்கிறதோ அதை நீங்கள் தைரியத்துடன் எதிர் கொள்வதாக நினைதுக்கொளுங்கள். இப்படி உங்களை பற்றி நீங்கள் நேர்மறையாக நினைத்துகொள்ளும் பொழுது அது உங்களுக்குள் இருக்கும் பயத்தை போக்கும்.
உங்கள் தைரியத்தை பாராட்டுங்கள்
ஒவ்வொரு முறையும் என்னை பயமுறுத்தும் செயலை பயம் இல்லாமல் செய்து என்னை நான் வலிமையனவனாக மாற்றி அடுத்து எதாவது ஒரு பயம் வந்தால் அது என்னை நெருங்கதவாறு பார்த்துக்கொள்வேன் என உங்கள் தைரியத்தை நீங்களே பாராட்டிக்கொளுங்கள்.
பயத்தை எதிர்கொள்ளுங்கள்
உங்களுக்கு பயம் தரும் செயலை தைரியமாக செய்யவும் தொடர்ந்து இதே போல் பயம் தரும் செயலை செய்வதன் மூலம் உங்களின் பயம் இல்லாமலேயே போய்விடும்.
வாய்ப்பாக பாருங்கள்
பயத்தை ஒரு வாய்ப்பாக பாருங்கள் ஏனெனில் ஒரு பிரச்சனையை கண்டறிந்து அதை திறமையாக தீர்க்க உதவியாக இருப்பது பயம் தான். அதனால் அச்சம் இருப்பது பரவாயில்லை என உணருங்கள்.
நன்றி








ConversionConversion EmoticonEmoticon